திண்டுக்கல்

தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்: புதிதாக 3000 நோயாளிகள் பாதிப்பு

DIN

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் மூலம் புதிதாக 3000 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையிலும் 21 நாள்கள் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.
முகாமின்போது, எளிதில் மருத்துவ வசதி கிடைக்காத பகுதிகளை கண்டறிந்து, குறிப்பாக குவாரிகள், நெசவு மற்றும் பஞ்சாலைத் தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் ஆகிய இடங்களை தேர்வு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மூலம், காசநோய் பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக அளவில் சேலம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சேலத்தில் 265 பேர், 250 பேருடன் காஞ்சீபுரம் மாவட்டம் 2ஆவது இடத்திலும், 230 பேர்களுடன் நெல்லை மாவட்டம் 3ஆவது இடத்திலும் உள்ளன.
அதற்கு அடுத்ததாக 227 பேருடன் திண்டுக்கல் மாவட்டம் 4ஆவது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 3000 புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநர்(காசநோய்) எம்.ராமச்சந்திரன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 42,500 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 2,600 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 198 பேருக்கு சளியில் கிருமி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் 495 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 27 பேருக்கும், கழுத்தில் கட்டியுள்ள 2 பேருக்கும் காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 21 நாள் நடைபெற்ற சிறப்பு முகாமின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 227 புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT