திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

DIN

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
  ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள 18 வார்டுகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக கைராசி நகர் பகுதியில் நகராட்சி ஆணையர் எம்.இளவரசன் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரஆய்வாளர் வீரபாகு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகானந்தம், தணிக்காசலம், முருகேசன், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வீரப்பன், தலைமை நிலைய அலுவலர் ஈஸ்வரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT