முகப்பு
திண்டுக்கல்

பழனி அரசு மருத்துவமனையில் பெண் சாவு: உறவினர்கள் தர்னா

பழனி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் சடலத்தை பெற மறுத்து வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

பழனி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் சடலத்தை பெற மறுத்து வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
  பழனியை அடுத்துள்ள புதுஆயக்குடி 9 ஆவது வார்டைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. கூலித் தொழிலாளி.  இவரது மனைவி பொன்மலர் (28).  இவர்களுக்கு காயத்ரி (17) என்ற மகளும், சித்தன் (12), மாரிமுத்து (11) என்ற இரு மகன்களும் உள்ளனர். கடந்த டிச.22 ஆம் தேதி பொன்மலர் மீது இரு சக்கரவாகனம் மோதியதில் இடதுகால் முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். 
 கடந்த 5 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த பொன்மலருக்கு வியாழக்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொன்மலர் உயிரிழந்து விட்டாராம்.  இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும் போது, பொன்மலருக்கு, மயக்க மருந்து கொடுத்த போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொன்மலரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது  உறவினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். 
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்பட வில்லை. பொன்மலர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சடலத்தை வெளிமாவட்ட மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →