திண்டுக்கல்

திண்டுக்கல் சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திண்டுக்கல் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, அனுக்ஞை,  விநாயகர் ஹோம பூஜை, புண்யாக வாஜனம் மற்றும் வாஸ்து பூஜைகள் சனிக்கிழமை காலை தொடங்கின. பின்னர்,  முதல்கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனைகளோடு முதல் நாள் பூஜைகள் நிறைவடைந்தன.  தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 2ஆம் கால யாகசால பூஜை நடைபெற்றது. மஹா பூர்ணாஹூதி, தீபாராதனைக்கு பின், கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு  கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர்,  சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
 இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT