திண்டுக்கல்

ஓய்வூதியர்கள் நேர்காணல்: ஜூலை 31 வரை வாய்ப்பு

DIN

மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் ஜூலை 31-ஆம்  தேதிக்குள் நேர்காணலுக்கு வரவில்லை என்றால் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கருவூல அலுவலர் எம்.தவசுகனி தெரிவித்துள்ளது: திண்டுக்கல்  மாவட்டத்தில் 18,392 பேர் மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம்  ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் வாழ்வு சான்றினை  உறுதி செய்யும் வகையில் 2017ஜூன் 30 ஆம் தேதிக்குள் நேர்காணலுக்கு  வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாவட்டம் முழுவதும் இதுவரை 17,738  பேர் நேர்காணலுக்கு வந்துள்ளனர். அதாவது 96.4 சதவீதம் பேர் வந்துள்ளனர்.
மீதமுள்ள  654 பேரும் நேர்காணலில் பங்கேற்கும் வகையில், ஒரு மாதம் அதாவது 2017 ஜூலை 31ஆம் தேதி வரை  காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கால கெடுவுக்குள் வராத ஓய்வூதியர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் முதல்  ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT