திண்டுக்கல்

கொடைக்கானலில் தலைமைப் பண்பு பணியிடைப் பயிற்சி முகாம்

DIN

கொடைக்கானலில் தலைமைப் பண்பு பணியிடைப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக கல்வியியல் துறை, புதுதில்லி தேசிய கல்வி திட்டமிடல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த முகாமில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்த 31 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ஜோசப் பயிற்சி வழங்கினார்.
 இவர்களுக்கு பள்ளி, சமூகம் மற்றும் திறமை, நம்பிக்கை என்ற தலைப்பிலும், தன்னை அறிதல், தலைமையேற்று நடத்தல் என்ற தலைப்பிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT