திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனங்களுக்கு சீல்

DIN

ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து மூடப்பட்டன.
   ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி நிதி நிறுவனங்கள் இயங்கி வருவதாக, பழனி சார்-ஆட்சியருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை இரவு சார்-ஆட்சியர் வினீத், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் கே. மாரிமுத்து, காவல் ஆய்வாளர் கே. கோட்டைச்சாமி, துணை வட்டாட்சியர் முத்துச்சாமி ஆகியோர், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் உள்ள நிதி நிறுவன அலுவலகங்களில் ஆய்வு செய்தனர். அதில், அந்த நிறுவனங்கள் எந்தவித அரசு அனுமதியும் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. எனவே, அந்த நிறுவனங்களை பழனி சார்-ஆட்சியர் வினித் சீல் வைத்து மூடினார்.
   இதேபோன்று, ஒட்டன்சத்திரம் நகரில் பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் நிதி நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT