முகப்பு
திண்டுக்கல்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மாவட்ட போட்டி: கரிசல்பட்டி அரசுப் பள்ளி மாணவி சாம்பியன்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டியில் கரிசல்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி சாம்பியன் பட்டம் வென்றார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டியில் கரிசல்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி சாம்பியன் பட்டம் வென்றார்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்ட அளவிலான மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த 2 நாள்களுக்கு முன் நடைபெற்ற இப்போட்டியில் கரிசல்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி க.காளீஸ்வரி 3 போட்டிகளில் பதக்கம் வென்றதோடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
மென்பந்து எறிதல் போட்டியில் முதலிடமும், நின்ற இடத்திலிருந்து தாண்டுதல் போட்டியில் 3ஆவது இடமும், 50 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2ஆம் இடமும் பெற்றார்.
இதனை அடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் இரா.மாண்டினி பெலிக்ஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோர் மாணவி காளீஸ்வரிக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை மேரி கிறிஸ்டினாவுக்கும் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →