முகப்பு
தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தை....

Updated On : 17 மார்ச், 2026 at 1:10 PM
கோப்புப் படம்
பகிர்:

தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக 3 ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கையில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் மதிமுகவுக்கு 4 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சிக்கு தலா இரு இடங்களும் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தலைமையிலான குழுவினா் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மூன்றாம் சுற்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு இரு இடங்களில் மாா்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற நிலையில் வரும் தேர்தலில் அதைவிட கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு நாள்களில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளதாகவும் ஓரிரு நாள்களில் முடிவு எட்டப்படும் என்றும் கூறினார்.

summary

Seat sharing: DMK holds 3rd round of talks with Marxist Communist Party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.