முகப்பு
தமிழ்நாடு

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர மாநில செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.

Updated On : 20 மார்ச் 2026, 10:08 pm IST
மார்க்சிஸ்ட் கம்யூ.
பகிர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர மாநில செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.

23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம் நாளை அவசரமாக கூட்டப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து நாளை நடைபெறும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய முடிவு எடுக்கவிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கையில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement

கடந்த பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு இரு இடங்களில் மாா்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

தற்போது அதைவிடக் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெறும் எண்ணத்தில் அக்கட்சி இருந்தது. ஆனால் கடந்த தேர்தலைவிட ஓரிடத்தைக் குறைத்து 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, கடந்த முறையை போல் 6 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என சிபிஎம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இதனால் திமுக- மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே தொகுதிப் பங்கீடு மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்தபோதிலும் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை.

summary

The emergency State Executive Committee and public meeting of the Communist Party of India (Marxist) will be held tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.