முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி  குப்பைக் கிடங்கு பகுதி பரிசீலிக்கப்படுமா?

திண்டுக்கல் மக்களின் எதிர்கால தேவை கருதி, தற்போது குப்பைக் கிடங்கு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு செயல்பட்டு வரும் பகுதியை

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி  குப்பைக் கிடங்கு பகுதி பரிசீலிக்கப்படுமா?

திண்டுக்கல் மக்களின் எதிர்கால தேவை கருதி, தற்போது குப்பைக் கிடங்கு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு செயல்பட்டு வரும் பகுதியை

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

திண்டுக்கல் மக்களின் எதிர்கால தேவை கருதி, தற்போது குப்பைக் கிடங்கு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு செயல்பட்டு வரும் பகுதியை புறநகர் பேருந்து  நிலையம் அமைப்பதற்கான இடமாக தேர்வு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   
 திண்டுக்கல் மாவட்டத்தில், டிச.9ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவின் போது ஒவ்வொரு துறை சார்பிலும் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து கருத்துரு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல் நகர மக்களின் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை மீது கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
 திண்டுக்கல்- மதுரை 4  வழிச்சாலையில், தோமையார்புரம் பகுதியில் இந்த புறநகர் பேருந்து நிலையத்தை அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
 தோமையார்புரம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், பழனியிலிருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 3 கி.மீட்டர் தூரம் தெற்கு நோக்கி பயணித்து மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே திண்டுக்கல்- பழனி சாலையில், மதுரை- கரூர் 4 வழிச்சாலையிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் தற்போது நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மற்றும் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ள பகுதியை புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடமாக தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொறியாளர் ஒருவர் கூறியது: திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் சரக்கு லாரிகள் விபத்துக்கான பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதனிடையே திண்டுக்கல் அடுத்துள்ள தாமரைப்பாடி ரயில்நிலையத்தில் சரக்கு ரயில்களை நிறுத்,துவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பழனி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கு தாமரைப்பாடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்காலத்தில் தவிர்க்க முடியாது.
 மேலும், வீடுகள் நிறைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்  நீண்ட நாள்களாக எழுப்பப்பட்டு வருகிறது. சரக்கு லாரிகளால் விபத்து அபாயம், குப்பை கிடங்கால் ஏற்படும் துர்நாற்றம், தீ  விபத்து போன்ற பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய பேருந்து நிலையத்திற்கான இடமாக இந்த பகுதி தேர்வு செய்யப்பட்டால் பொதுமக்களின் கோரிக்கைகளும் நிறைவேறும்.
 தற்போது வாணிவிலாஸ் சிக்னல் பகுதியிலிருந்து பழனி புறவழிச்சாலை வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதனால், 600 மீட்டர் தொலைவிலிருந்து 4 வழிச்சாலையை எட்டுவதில் பேருந்துகளுக்கு சிரமம் இருக்காது. பழனி, திருச்சி, மதுரை, கரூர் என 4 திசைகளிலும் இடையூறில்லாமல் பேருந்துகளை இயக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இந்த இடம் மட்டுமே சரியானதாக இருக்கும் என்றார்.
 எனினும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்ட பின், பயணிகள், ஓட்டுநர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம் ஆகும்.

ரூ.5 கோடி நிதி விரயமாவதை தடுக்க கோரிக்கை
புறநகர் பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.5 கோடி நிதியை பயன்படுத்தி எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது.  புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது உறுதியாகும் பட்சத்தில், பழைய  பேருந்து நிலையத்தின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற பணிகளை நிறைவேற்றினால், நிதி விரயமாவதை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →