திண்டுக்கல்

கரூரைச் சேர்ந்த ரௌடி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

கார் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய கரூரைச் சேர்ந்த ரௌடியை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
    கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்துள்ள கீழபஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜ் பெருமாள். இவரது மகன் சுரேஷ் என்ற குளித்தலை சுரேஷ் (42). கார் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இவர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வந்த சுரேஷ், வழிப்பறியில் ஈடுபட்டபோது போலீஸார் கைது செய்தனர். தற்போது, திண்டுக்கல் மாவட்டச் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள சுரேஷை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT