திண்டுக்கல்

குடிநீர் விநியோகிக்கக் கோரி பழனி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

குடிநீர் வழங்கக் கோரி, பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் போலம்மாபட்டி கிராமத்துப் பெண்கள் முற்றுகையிட்டனர்.
     திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த போலம்மாபட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இக் கிராமத்துக்கு பாலாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது.       இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
எனவே, ஏராளமான பெண்கள் காலிக் குடங்களுடன் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபுபாண்டியன், முற்றுகையிட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  அப்போது, பெண்கள் குடிநீர் இல்லாததால் தாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், போலம்மாபட்டி கிராமத்தில் சுகாதார வசதிகள் முறையாக செய்யப்படாத நிலையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும், ரயில்வே தரைப் பாலத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் குழந்தைகள் முதியவர்கள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
    விரைவில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT