திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே மக்கள் தொடர்பு முகாம்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே சோளியப்பகவுண்டனூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 213 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சி.இந்திரவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் 89 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா, 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை என மொத்தம் 213 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நில அளவை உதவி இயக்குநர் சுந்தராஜன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சுரேஷ்ராம், மாவட்ட சமூக நல அலுவலர் கு.சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.அல்லிராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பொ.மாரிமுத்து, துணை வட்டாட்சியர் எம்.முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT