முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தினவிழா

இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக சுகாதார

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:56 AM
பகிர்:

இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக சுகாதார தினவிழா ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சாந்தி (பொறுப்பு) தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தமிழ்ச்செல்வி, இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளை தலைமை மருத்துவர் கருப்பணன், கொன்றங்கி கீரனூர் வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளைச் செயலர் மருத்துவர் ஏ.ஆசைத்தம்பி வரவேற்றார். பழனி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் மருத்துவர் வரதராஜன் சிறப்புரையாற்றி, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியருக்கு பரிசு வழங்கினார். 
இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலர் ராஜகுரு, துணை அவைத் தலைவர் ஷேக்தாவூது, இணைச் செயலர்கள் இஸ்மத், ஹெரால்டு ஜாக்சன், ஒட்டன்சத்திரம் கருவூல உதவி அலுவலர் தவமணி ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆசிரியர் பயிற்சி பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.