முகப்பு
திண்டுக்கல்

கொடைரோடு சுங்க கட்டண வசூல் மையம் முற்றுகை: 44 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கொடைரோடு சுங்க கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 44 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:58 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கொடைரோடு சுங்க கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 44 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இப்போராட்டத்துக்கு  ஒன்றிய இளைஞர் அணி செயலர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, சின்னமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தால் சுங்கச் சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அம்மையநாயக்கனூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.