திண்டுக்கல்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் அகற்றம்: தாண்டிக்குடி சாலையில் மறியல்

DIN

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாண்டிக்குடி சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 அய்யம்பாளையம் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பட்டி பிரிவில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கொடிக் கம்பம் ஊன்றப்பட்டு, கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
  இந்நிலையில், அந்த கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை இரவு அகற்றியுள்ளனர். பின்னர், அந்த கம்பத்தை அருகிலுள்ள கிணற்றில் வீசிச் சென்றுவிட்டனர்.
 இதனை அறிந்த அப்பகுதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள், கொடிக் கம்பத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அய்யம்பாளையம் தாண்டிக்குடி சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸார், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கொடிக் கம்பத்தை அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 இம்மறியல் போராட்டம் காரணமாக, சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT