பழனியில் மெய்த்தவ பொற்சபையின் குருவணக்க விழா
பழனி நேதாஜிநகர் மெய்த்தவ பொற்சபை சார்பில் ஏழாம் ஆண்டு குருவணக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பழனி நேதாஜிநகர் மெய்த்தவ பொற்சபை சார்பில் ஏழாம் ஆண்டு குருவணக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பழனி நேதாஜி நகர் மெய்த்தவ பொற்சபையில் சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவாக ஏழாம் ஆண்டு குருவணக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மெய்த்தவம் அடிகள் தலைமை வகித்து ஏற்புரை வழங்கினார். யோகாச்சார்யா முருகன் வரவேற்புரையாற்றினார். அர்ஜென்டினா மாதா திரிதேவி முன்னிலை வகித்தார்.
விழாவில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் வாழும் கலை சாது சசிதர் ஆசார்யா குழுவினர் பஜனைப்பாடல்களை பாடினர்.
காரணம்பேட்டை சக்ரா மகா சமஸ்தானம் யுக்தேஷ்வரானந்தபுரி சுவாமிகள், குன்னூர் ஜெயப்பிரகாஷ் சுவாமிகள் உள்ளிட்டோர் ஆசியுரை வழங்கினர்.
விழாவில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட யோகாசனப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கந்தவிலாஸ் பாஸ்கரன் வழங்கினார். விழாவில் முக்கிய பிரமுகர்களும், பல்வேறு வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.