திண்டுக்கல்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

DIN

பழனி சண்முக நதியில் தற்போது அணைகள் திறந்து விடப்பட்டுள்ளதால் அதிக அளவில் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் புனிதநீராடி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை சண்முக நதியின் வடக்குப் பகுதியில் புதர் மண்டியுள்ள இடத்தில் சடலம் ஒன்று நீரில் மூழ்கி இருப்பதைக் கண்ட பொதுமக்கள், பழனி டவுன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமார் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இறந்த நபர் காவி வேட்டி அணிந்திருந்தார். அவர் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாரா எனத் தெரியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT