திண்டுக்கல்

பட்டாசு சில்லறை விற்பனை: உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

DIN


பட்டாசு சில்லறை விற்பனை செய்வதற்கு தற்காலிக உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் உரிய ஆவணங்களுடன் செப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பட்டாசு சில்லறை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் பெற, இணைய வழி மூலமாக விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிவடையவில்லை. இந்நிலையில் வணிகர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த உரிமங்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனை செய்வதற்கு தற்காலிக உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் வெடிபொருள் சட்ட விதிகள்-2008 ன்படி உரிய ஆவணங்களுடன் செப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். செப்.28ஆம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT