திண்டுக்கல்

குடிநீர் வசதிகோரி திண்டுக்கல்லில் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

DIN


குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி திண்டுக்கல்லில், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 3 முறை புகார் அளித்தும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியினர் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் 7ஆவது வார்டுக்குள்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன், பெரியார் சிலை அருகே சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, பழனி மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தற்காலிகமாக லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT