திண்டுக்கல்

பிரசாரத்தில் அமமுக தொண்டர் விபத்தில் பலி

DIN

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமமுக தொண்டர், இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன், திண்டுக்கல் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து, அமமுக தொண்டர்களும் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். நத்தம் சாலையில் குள்ளனம்பட்டி பகுதியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, உணவு இடைவேளையில் தொண்டர்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் மகன் விஜய் (18) மற்றும் பிள்ளையார்பாளையம்  பகுதியைச்  சேர்ந்த சதீஷ் (18) ஆகியோர் ஒரு இரு சக்கர வாகனத்திலும், தோட்டனூத்து பகுதியைச் சேர்ந்த வினித் (29) மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, குள்ளனம்பட்டி பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில், விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சதீஷ் மற்றும் வினித் ஆகிய இருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இது குறித்து தகவலறிந்த அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன், மாநகர் மாவட்டச் செயலர் ராமுத்தேவர் ஆகியோர், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்த விஜய்யின் குடும்பத்தினருக்கும், காயமடைந்த சதீஷ் மற்றும் வினித் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை!

தருமபுரியில் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை!

SCROLL FOR NEXT