திண்டுக்கல்

"மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்'

DIN

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவர்கள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 தமிழகத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பார்சி, புத்த மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
 அதேபோல், 11 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் அல்லது ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகள் உள்பட) பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும், தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலுவோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.  ‌w‌w‌w.‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2019 -20 ஆம் கல்வி ஆண்டில், தமிழகத்தில் 1,35,127 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
 உதவித்தொகை அந்தந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு மூலம் நேரடியாக செலுத்தப்படும். உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பள்ளி மாணவர்கள் அக்.15ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் அக். 31ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, புகைப்படத்துடன்  சமர்ப்பிக்க வேண்டும்.
 இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT