திண்டுக்கல்

பழனி அருகே வேன் மரத்தில் மோதியதில் இளைஞர் பலி

DIN

பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காளிபாளையத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் மகன் முகமது பாசில் (19). இவரும், இவரது நண்பரான யாசரும் சேர்ந்து, பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வாங்குவதற்காக கீரனூரை அடுத்த தாளையூத்துக்கு வேனில் சென்றுள்ளனர்.  மேல்கரைப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதி நொறுங்கியது. இதில், முகமது பாசில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கீரனூர் போலீஸார், முகமது பாசிலின் சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்த யாசரை சிகிச்சைக்கு சேர்த்தனர். 
இந்த விபத்து குறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு 
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT