திண்டுக்கல்

பேரீஜம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுமா?

DIN

கொடைக்கானல் அருகே 20 கி.மீ. தொலைவிலுள்ள பேரீஜம் ஏரியிலிருந்து பெரியகுளம் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், ஜமீன்தார் காலத்தில் குழாய் பதித்து, தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதனால், பெரியகுளம் பகுதிக்கு பல நூற்றாண்டுகளாகவே தண்ணீர் பிரச்னை என்பது இல்லை.
இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர், பெரியகுளம் நகராட்சிக்கு தண்ணீர் வெளியேறும் பகுதியை அடைத்து, மற்றொரு வழியில் விவசாயத்துக்கு தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை, கொடைக்கானல் வனத் துறையினரும், பெரியகுளம் நகராட்சியினரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், பெரியகுளம் பகுதி மக்களுக்கு வறட்சி காலத்தில் கூட பேரீஜம் ஏரி தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, பேரீஜம் ஏரியிலிருந்து பெரியகுளத்துக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் குழாயிலுள்ள அடைப்பை நீக்கிவிட்டு, முறையாக தண்ணீரை கொண்டு வர, பெரியகுளம் நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT