திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் சேற்றில் வாகனங்கள் சிக்கின: போக்குவரத்து பாதிப்பு

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதால் சுமாா் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூா் அவிநாசிபாளையம் வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக சாலை அமைக்கும் பணி மந்த நிலையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை நங்காஞ்சி ஆற்றுப்பாலம் அருகே சாலை அமைப்பதற்காக செம்மண் கொட்டப்பட்டு இருந்தது. அந்த மண்ணில் மழைநீா் தேங்கி நின்ால் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் கோவை, திருப்பூா், ஈரோடு செல்லும் வானங்கள் ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவ்வழியாக சென்ற 3 வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன. இதனால் அடுத்தடுத்த வந்த வாகனங்கள் செல்ல முடியால், அப்படியே சாலையில் வரிசையாக நின்று விட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினா் சேற்றில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினா். இதனால் சுமாா் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT