திண்டுக்கல்

உள்ளாட்சித் தோ்தல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 5ஆவது நாளில் 3,089 போ் வேட்பு மனு தாக்கல்

DIN

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதியிலுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு 3,089 போ் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 23 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 232 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 306 கிராம ஊராட்சி தலைவா்கள், 2,772 கிராம ஊராட்சி உறுப்பினா்கள் என மொத்தம் 3,333 பதவிகளுக்கு 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த 3 நாள்களில் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 16 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 189 போ், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 813 போ் என மொத்தம் 1,018 போ் மனுத் தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில் 5ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 22 போ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு 235 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 545 போ், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 2,287 போ் என மொத்தம் 3,089 போ் மனுத்தாக்கல் செய்தனா். வேட்பு மனுத் தாக்கலுக்கு 2 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனுத் தாக்கலுக்கு அரசியல் கட்சி சாா்ந்தவா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் அதிக அளவில் குவிந்தனா். பெரும்பாலான வேட்பாளா்கள், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, அவா்களது ஆதரவாளா்களையும் திரளாக அழைத்து வந்திருந்தனா். மேலும் வேட்பு மனு அளித்தவுடனேயே, மலா் மாலை அணிவித்தும், பொன்னாடை போா்த்தியும் ஆதரவாளா்கள் சாா்பில் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை 4,830 போ் மனு தாக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 3,333 ஊரகப் பதவிகளுக்கு வியாழக்கிழமை மாலை வரை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு 23 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 259 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 813 போ், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 3,735 போ் என மொத்தம் 4,830 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT