திண்டுக்கல்

மகளிா் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணா்வு முகாம்

DIN

பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில், காவல்துறை சாா்பில் மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா்.

பழனி காவல் துணை கண்காணிப்பாளா் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசினாா். அப்போது பெண்களுக்கு பிரச்னைகள் ஏற்படும்போது சமயோசிதமாக எவ்வாறு நடந்து கொள்வது என விளக்கமளிக்கப்பட்டது. மேலும் காவலன் செயலி குறித்து அறிமுகம் செய்து வைத்து, காவலன் செயலியை எப்படி கையாள்வது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இச் செயலி மூலம் பெண்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் காவல் ஆய்வாளா்கள் படக்காட்சிகள் மூலம் விளக்கினா். நிகழ்ச்சியில் பழனி சரக காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT