திண்டுக்கல்

மன்னவனூரில் மஞ்சுவிரட்டு: 3 பேர் காயம்

DIN

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் 3 பேர் காயமடைந்தனர்.
உழவுக்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகளுக்கான பொங்கல் விழா கொடைக்கானல் கிராமப் பகுதிகளான செண்பகனூர், வில்பட்டி, மாட்டுப்பட்டி, சகாயபுரம், பள்ளங்கி, பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கால், 
குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மன்னவனூர் பகுதியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 3 பேரை மாடுகள் முட்டியதில் அவர்கள் காயமடைந்தனர். 
இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு மன்னவனூரில் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமானவர்களும் கலந்து கொண்டனர். இதேபோல மேல்மலைக் கிராமமான கவுஞ்சிப் பகுதியிலும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT