திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் ஒப்பந்ததாரர் வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ.1.40 லட்சம் திருட்டு

DIN

ஒட்டன்சத்திரம் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.40 லட்சம் திருடு போனது குறித்து வியாழக்கிழமை   போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியைச் சேர்ந்தவர் முகமது ரசீம் (31). இவர் ஒட்டன்சத்திரம் நகராட்சி அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். 
இந்நிலையில்  பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மூணாறுக்கு சுற்றுலா சென்று விட்டு வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளார். 
அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.40 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT