திண்டுக்கல்

கொடைக்கானலில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியவர்கள் மீது புகார்

DIN

கொடைக்கானல் அருகே மன்னவனூர் பகுதியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியவர்கள் மீது கால்நடைத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூர், கவுஞ்சி ஆகியப் பகுதிகளில் அனுமதியில்லாமல்  அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 16 ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடத்தினர். இதில் கணேசன், மாரிமுத்து, ராஜா உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக கால்நடைத்துறை உதவி மருத்துவர் தங்கராஜ் மன்னவனூர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி, சுந்தர் மற்றும் கிராம கமிட்டியினர் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
கும்பூரில் மஞ்சுவிரட்டு நடத்த தடை; கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கும்பூரில் ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
இதனைத் தொடர்ந்து கும்பூரில் மஞ்சுவிரட்டு நடத்துவது குறித்து சனிக்கிழமை வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT