திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பேருந்து- வேன்கள் மோதல்: ராமநாதபுரம் பெண் பக்தர் உள்பட 2 பேர் சாவு

DIN

திண்டுக்கல் அருகே பழனி கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வந்த 2 வேன் மற்றும் அரசுப் பேருந்து மோதிய விபத்தில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் பக்தர் உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் 30-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில், பழனிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். 
பழனியில் வழிபாடு செய்த பின், மீண்டும் ராமநாதபுரம் செல்வதற்காக 2 வேன்களில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுள்ளனர். அந்த வேன்கள், திண்டுக்கல் அடுத்துள்ள ராமையன்பட்டி பிரிவு அருகே வந்தபோது, ஒரு வேன் மற்றொரு வேனை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே திண்டுக்கல்லிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த ராமநாதபுரம் எம்.எஸ்.நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி பத்மா(18), பேருந்தில் பயணம் செய்த திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த அப்துல்குத்தூஸ் மனைவி தங்கம்மாள்(56) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
மேலும் ஆண்கள், பெண்கள் உள்பட மொத்தம் 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT