முகப்பு
திண்டுக்கல்

அரசுப் பேருந்து மோதியதில் பெண் சாவு

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார்.

Updated On : 23 ஜனவரி 2019, 7:36 am IST
பகிர்:

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தார்.
 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (26). இவர் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் தனது மனைவி கஸ்தூரி (24) மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 
ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை பெருமாள்கோயில் வலசு அருகே சென்ற போது, பின்னால் தாராபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.