திண்டுக்கல்

மக்கள் நீதிமன்றம்: 4,344 வழக்குகளுக்கு ரூ.11.50 கோடி தீர்வுத் தொகை

DIN


திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4,344 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.11.50 கோடி தீர்வுத் தொகையாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் நீதிமன்றங்களில், மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா முன்னிலை வகித்தார். 
நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல நீதிபதி சிங்கராஜ், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரத்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள 7 நீதிமன்றங்களில் 11 அமர்வுகளில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், வங்கி வராக் கடன் வழக்குகள் 340, நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள், விபத்து இழப்பீட்டு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உள்ளிட்ட 4002 வழக்குகள் என மொத்தம் 4,344 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
இந்த வழக்குகளில் தீர்வுத் தொகையாக ரூ.11.50 கோடி வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT