திண்டுக்கல்

"மின்னணுவியல் துறை மாணவர்களுக்கு  மருத்துவத் துறையில் அதிக வாய்ப்பு'

DIN

மருத்துவத்துறையில் மின்னணுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளதாக தேசிய அளவிலான கருத்தரங்கில்  தெரிவிக்கப்பட்டது.
 திண்டுக்கல் எஸ்எஸ்எம். பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையுடன் மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. மருத்துவ, சுகாதார பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரி மருத்துவ செயல்முறைகள் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
 இதில், எஸ்எஸ்எம். கல்லூரி முதல்வர் மு.சரவணன் தலைமை வகித்தார். வளாக இயக்குநர் ஆர்.சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னணுவியல் துறை பேராசிரியர் பி.சைமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  அவர் பேசியதாவது:  மருத்துவத் துறையில் மின்னணுவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அதற்கான தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழக பாடத்திட்டத்தை கடந்து, தொழில்நுட்பம் சார்ந்த கூடுதல் தகவல்களை பெற இதுபோன்ற கருத்தரங்குகள் உதவும். சமுதாயத்திற்கு உதவும் வகையிலான தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குவதற்கு மாணவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நோய் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து, அதனை குணப்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றார். 
 கருத்தரங்கில் 100-க்கு மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடக்க நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.எம். கல்லூரி போராசிரியர் கார்த்திகை லெட்சுமி, ஜி.மோகன்பாபு, உதவிப் போராசிரியர் எஸ்.ஆர்.அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT