திண்டுக்கல்

கஞ்சா வைத்திருந்த  3 பேர் கைது

கொடைக்கானலில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

DIN

கொடைக்கானலில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்றுகொண்டிருந்த 3 பேரை நிறுத்தி போலீஸார் விசாரித்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், ஒன்றேகால் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 
    விசாரணையில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விஜி (19), பாலாஜி(21) மற்றும் காமாட்சி (20) எனத் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT