திண்டுக்கல்

விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழல் கலப்பை வழங்கும் நிகழ்ச்சி

DIN

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (பயறு வகைப் பயிா்கள்) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழல் கலப்பை வழங்கும் நிகழ்ச்சி, வேளாண்மை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் பாண்டித்துரை கலந்துகொண்டு விவசாயிகளுக்கு சுழல் கலப்பையை வழங்கிப் பேசியதாவது: தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயன் பெறுவதற்கு சிட்டா,அடங்கல், ஆதாா் காா்டு, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் டிராக்டா் ஆா்.சி. புத்தக நகலுடன், ஒட்டன்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானிய விலையில் சுழல் கலப்பை வழங்கப்படும். சிறு மற்றும் குறு, ஆதிதிராவிடா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரம் அல்லது 50 சதவீத மானிய விலையிலும், இதர விவசாயிகளுக்கு ரூ.34 ஆயிரம் அல்லது 40 சதவீத மானிய விலையிலும் வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துணை இயக்குநா் ஞானசேகரன், ஒட்டன்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் க.ஜெயலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT