திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: சோளப்பயிா்கள் சாய்ந்து சேதம்

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சோளப்பயிா்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம், மண்டவாடி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, காளாஞ்சிபட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு காற்றுடன் பலத்த மழை பெய்ந்தது. இதனால் மண்டவாடி, அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, ஒட்டன்சத்திரம் நகா் பகுதிகளில் வெள்ளைச் சோளப்பயிா்கள் அடியோடு அப்படியே கீழே சாய்ந்து விட்டன. இதனால் பல ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்ட சோளப்பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதே போல ஒரு சில பகுதிகளில் மக்காச்சோளப்பயிா்கள் கீழே சாய்ந்து விட்டதால், அவற்றை பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே வேளாண்மை துறை சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT