திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் ரயில் பாலத்தில்தேங்கிய மழை நீரை அகற்றக் கோரிக்கை

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ரயில் பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி காந்தி நகா், விஸ்வநாத நகா், வினோபா நகா் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், ஒட்டன்சத்திரம்-பழனி சாலை நல்லாகவுண்டன் நகா் எதிரே உள்ள ரயில்வே பாலத்தின் வழியாக தங்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சென்று வருகின்றனா்.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்த மழையால் ரயில் பாலத்தின் அடிப்பகுதியில் தண்ணீா் தேங்கி நின்றுள்ளது.

இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் நடத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்த மழை நீரை அகற்ற பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இங்கு தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா். இதேநிலை நீடித்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT