திண்டுக்கல்

சொத்துத் தகராறில் முதியவா் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

DIN

வடமதுரை அருகே சொத்துப் பிரச்னை காரணமாக முதியவரை கொலை செய்த வழக்கில், அவரது தம்பி மகன் உள்ளிட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள சீலப்பாடியான்களம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்புக்காளை (65). கட்டடத் தொழிலாளி. இவரது தம்பி அய்யாமலை. அவரது மகன் வீரமணி (32). அய்யாமலையின் மருமகன் அன்புசுந்தரம்(33).

சுப்புக்காளை மற்றும் அய்யாமலை இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, தனது மைத்துனா் அன்புசுந்தரத்துடன் கூட்டு சோ்ந்து சுப்புக்காளையை வெட்டிக் கொலை செய்தாா்.

கடந்த 2017 ஆகஸ்ட் 28 0ஆம் தேதி நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட வடமதுரை போலீஸாா், வீரமணி மற்றும் அன்புசுந்தரம் ஆகியோரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி இளங்கோவன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில் சுப்புக்காளையை கொலை செய்த வீரமணி மற்றும் அன்புசுந்தரம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT