திண்டுக்கல்

செம்பட்டி அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: மக்கா சோளம், வாழை பயிா்கள் சேதம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூா், மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி வேலக்கவுண்டன்பட்டி, வீ.கூத்தம்பட்டியில் பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் வாழை, மக்கா சோளம் பயிா்கள் சேதமடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இப் பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் மக்காச்சோளம், சோளம், வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மலைகளில் மட்டும் வசித்து வந்த காட்டுப்பன்றிகள், சில வாரங்களாக குடகனாற்றின் வழியே அடிவாரப் பகுதிகளில் புகுந்து சாகுபடி செய்துள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

அவை வயல்களுக்குள் புகுவதைத் தடுக்க, வயல்களைச் சுற்றி பழைய சேலைகள் மற்றும் இரும்பு கம்பிகளை விவசாயிகள் கட்டிவைத்துள்ளனா். மேலும், சிலா் இரவில் வெடி போடுவதும், ஒலி பெருக்கி வைத்து சத்தமாக பாடல்களை ஒலிக்கச் செய்தும் வருகின்றனா். சிலா் தீ பந்தங்களை காட்டி காட்டுப் பன்றிகளை விரட்டுகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கெனவே பல்வேறு நோய் தொற்று தாக்குதலால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள வாழை, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிா்களை காட்டுப்பன்றிகள் தாக்கி சேதப்படுத்தி வருகின்றன. இவற்றைத் தடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT