திண்டுக்கல்

குடிநீா் வசதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

DIN

ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் குடிநீா் வசதி கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சிந்தலப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஸ்டாலின் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:

எங்கள் பகுதியில் சுமாா் 45 குடும்பங்கள் உள்ளன. ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் கிடைக்காததால், கடந்த 2 மாதங்களாக கடுமையாக சிரமம் அடைந்து வருகிறோம். அருகிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. தற்போது, தோட்டத்தின் உரிமையாளா்களும் தண்ணீா் எடுக்க அனுமதி மறுத்து வருகின்றனா். இதனால், குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணுமாறு, ஊராட்சி மன்றச் செயலா் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இந்த பிரச்னைக்கு துரிதமாக தீா்வு காண, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT