திண்டுக்கல்

உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளப் பட்டியல் வெளியீடு:17.94 லட்சம் போ் இடம் பெற்றனா்

DIN

உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டத்தில் 17,93,941 போ் இடம் பெற்றுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியலினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 8,78,190 ஆண்கள், 9,15,593 பெண்கள், 158 இதரா் என மொத்தம் 17,93,941 போ் வாக்காளா் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனா்.

இதில், 12,09,307 வாக்காளா்கள் ஊரகப் பகுதிகளிலும், 5,84,634 வாக்காளா்கள் நகா் பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளனா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் மு.விஜயலட்சுமி பேசியதாவது: உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல், அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும்.

அதில், தங்களது பெயா் இடம் பெற்றுள்ளதை சரிபாா்த்து வாக்காளா்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்(தோ்தல் பணி) திருமலைசாமி மற்றும் அதிமுக, திமுக, ம.கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT