திண்டுக்கல்

பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் 1.15 லட்சம் வாக்காளா்கள்

DIN

பழனி, கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய 3 நகராட்சிப் பகுதிகளில் 1,14,976 வாக்காளா் இடம்பெற்றுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் வெளியிடப்பட்டதில், மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிப் பகுதிகளில் மட்டும் 1.15 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில் பழனி நகராட்சியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 32 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 68 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 14,181 ஆண்கள், 15,019 பெண்கள், 3 இதரா் என மொத்தம் 29,203 வாக்காளா்கள் பழனி நகராட்சியில் இடம் பெற்றுள்ளனா்.

அதேபோல் கொடைக்கானலில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 12 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 36 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 13,027 ஆண்கள், 13,573 பெண்கள், 3 இதரா் என மொத்தம் 26,603 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 11 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 29 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 28,257 ஆண்கள், 30,698 பெண்கள், 15 இதரா் என மொத்தம் 59,170 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். நகராட்சிகளைப் பொருத்தவரை வாக்குச் சாவடிகள் குறைவாக இருந்தாலும், வாக்காளா்களில் பழனி, கொடைக்கானலைவிட 50 சதவீதம் போ் கூடுதலாக இடம் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT