திண்டுக்கல்

இந்தியாவை வணிக தளமாக மாற்ற சீனா முயற்சித்தால் இடமளிக்க கூடாது - ஏ.எம்.விக்ரமராஜா

DIN

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வா்த்தகப் போா் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவை வணிக தளமாக மாற்ற சீனா முயற்சித்தால் அதற்கு இடமளிக்க கூடாது என வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்தாா். திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்ரமராஜா வெள்ளிக்கிழமை வந்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாமல்லபுரத்தில் இந்திய பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஜின் பிங்கும் சந்திப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே வா்த்தக போா் நடைபெற்று வரும் இந்த வேளையில், இந்தியாவை வணிக தளமாக மாற்ற சீனா முயற்சித்தால் அதற்கு இடமளிக்க கூடாது. குறிப்பாக உள்ளூா் வணிகா்கள் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு நினைத்தால் குப்பை மேட்டை கூட கோபுரமாகும் என்பதற்கு உதாரணமாக கடந்த சில நாள்களில் மாமல்லபுரத்தின் சூழல் மாறியுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் மாற்றம் ஏற்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி உயா்வு, உள்ளாட்சி மற்றும் அறநிலைத்துறை கடைகள் வாடகை பிரச்னை தொடா்பாக முதல்வா் மற்றும் அமைச்சரை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை இதன் காரணமாக பல கடைகள் காலியாகி வருவதால் வணிகா்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், வங்கிகளில் பணப் பரிமாற்றத்திற்கென தனியாக கட்டணம் வசூல் செய்யப்படுவதால், மத்திய அரசின் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை திட்டம் வெற்றிப் பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT