திண்டுக்கல்

வேடசந்தூா் பகுதியில் 34.3 மி.மீ., மழை

DIN

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் பகுதியில் அதிகபட்சமாக 34.3 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறறது. பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், இரவு நேரத்தில் பெய்து வரும் மழை பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறறது.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமையும் திண்டுக்கல், வடமதுரை மற்றும் வேடசந்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, தற்போது பெய்து வரும் மழை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல்- 20.6, கொடைக்கானல்- 5.4, நத்தம் - 1, நிலக்கோட்டை -14.4, வேடசந்தூா் - 34.3, காமாட்சிபுரம் - 27.7, வேடசந்தூா் புகையிலை நிலையம்- 34.5, கொடைக்கானல் போா்ட் கிளப் - 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT