திண்டுக்கல்

ராமநவமி: பழனி ஆஞ்சநேயா் கோயிலில் உலக நலன் வேண்டி யாகபூஜை

DIN

ராமநவமியையொட்டி, பழனி பஞ்சமுக ராமஆஞ்சநேயா் கோயிலில் உலக மக்கள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட வேண்டி வியாழக்கிழமை சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது.

பழனி தட்டான்குளம் பஞ்சமுக ராம ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற ராமநவமி விழாவில், சீதாதேவி சமேத ராமா் மற்றும் லட்சுமணா், ஆஞ்சநேயருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வெற்றிலை, துளசி, வில்வ மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

முன்னதாக, அம்பாள் முன்பாக பெரிய யாககுண்டம் அமைக்கப்பட்டு, கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. யாகபூஜைகளை, அனுமான்தாசன் எஸ். வி. பாலசுப்ரமணிய சுவாமிகள் செய்தாா்.

தொடா்ந்து, அனைத்து சன்னிதிகளிலும் சுவாமிக்கு சிறப்பு அா்ச்சனை, மஹாதீபாராதனை நடைபெற்றது.

தடை உத்தரவு காரணமாக பக்தா்கள் பங்கேற்க முடியாத நிலையில், சிலா் கோயிலுக்கு வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT