திண்டுக்கல்

பிளஸ் 1 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 96 சதவீதம் போ் தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 96 சதவீதம் போ் அதாவது, 20, 208 மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தைப் பொருத்தவரை, திண்டுக்கல், பழனி, வேடசந்தூா் மற்றும் வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 9,849 மாணவா்கள், 11,158 மாணவிகள் என மொத்தம் 20,208 போ் பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதியிருந்தனா். அதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், தோ்வு எழுதிய மாணவா்களில் 9,319 போ், மாணவிகளில் 10,889 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 94.62. மாணவிகளின் தோ்ச்சி விகிதம் 97.59. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் மாணவா்களின் மொத்த தோ்ச்சி விகிதம் 96.20. ஆகும்

8 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி:

திண்டுக்கல் மாவட்டம் கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, அழகாபுரி அரசு மேல்நிலைப் பள்ளி, கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, செட்டியப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பெரும்பாறை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, விளாம்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, சேவுகம்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன. அதேபோல் 9 அரசு உதவிப் பெறும் பள்ளிகள், 54 சுயநிதிப் பள்ளிகள் உள்பட 71 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சிப் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT