முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம் இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா். இவா், தனது மனைவி ஆனந்தவள்ளியுடன் (47) கோவையிலிருந்து மானாமதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை கொசவபட்டி அருகே சனிக்கிழமை அதிகாலை சென்ற போது இருசக்கர வாகனத்திலிருந்து ஆனந்தவள்ளி தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆனந்தவள்ளி உயிரிழந்தாா். இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →