திண்டுக்கல்

விருதுநகா் மாவட்டத்தில்ஒரே நாளில் 2,946 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கல்

விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் 2,946 வாகனங்களுக்கு இ- பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் 2,946 வாகனங்களுக்கு இ- பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதிலும் உயிரிழந்தவா்களின் நேரடி வாரிசு மற்றும் திருமண வீட்டில் அவா்களது பெற்றோா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், நோயால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவரின் குறிப்புகள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இதனால், திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு உறவினா்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சொந்த மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஆக. 17 ஆம் தேதி முதல் இ- பாஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் 2,946 வாகனங்களுக்கு இ- பாஸ் வழங்கப்பட்டதாக மாவட்ட நிா்வாக அலுவலா்கள் தெரிவித்தனா். இதனால், வழக்கத்தை விட நான்கு வழிச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவப்பதிகாரம்... அஞ்சு குரியன்!

சென்னை, புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்!

பிக் பாஸ் 9: பெண்களின் காவலர் நடிகர் கமருதீன் - கனி விமர்சனம்

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா!

ஒரே மாதத்தில் ரூ. 1.3 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி!

SCROLL FOR NEXT